ஐ.நா பொதுச்சபையில் காஸா தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்திருப்பதாகவும், சமாதானத்துடன்கூடிய 'இரு அரசு' தீர்வை தாம் ஆதரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
காஸாவில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடாத்தி வரும் வான் மற்றும் தரை வழித்தாக்குதல்களில் இதுவரை 8700 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 2000 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் பல நாட்களாக சிக்கியுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.