காசாவின் சாம்பலில் இருந்து அழிவியும் அரபு வசந்தமும் பூதமாய் எழுமா?
அல்-நக்பா என்ற அரபு வார்த்தைக்கு அழிவி என்று தமிழிலே பொருள். 1948ல் இஸ்ரவேலின் பயங்கரவாதக் குழுக்களாலும் இராணுவப் படையினாலும் பலஸ்தீன மக்களுக்கெதிராக அவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களும் கொலைகளும் சுமார் 750,000 அரபு மக்களை தமது கிராமங்களையும் இல்லங்களையும் விட்டு வெளியேற்றப்பட்டு அவர்களை அகதிகளாக லெபனானிலும் எகிப்திலும் பலஸ்தீனின் இதர பகுதிகளிலும் தஞ்சம்புக வைத்தன.