வெலிகம பாரி அரபுக் கல்லூரி மீண்டும் திறப்பு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைய கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த வெலிகம, கல்பொக்க மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரி நேற்று முன்தினம் 30 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் அப்துல் ரஹ்மான் (மலாஹிரி) தெரிவித்தார்.