பூகோள முதலாளித்துவத்தின் பாதுகாவலனே சர்வதேச நாணய நிதி
சுதந்திர இலங்கையின் வரலாற்றிலே என்றும் ஏற்படாத ஒரு பொருளாதார வங்குரோத்தை 2022 இல் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியதால் பதினேழாவது முறையாக சர்வதேச நாணய நிதியின் கடன் உதவியையும் பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமான ஆலோசனைகளையும் இலங்கை அரசு நாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.