மக்கள் வழங்கிய ஆணை சரிவர பயன்படுத்தப்பட வேண்டும்
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட ஆசனங்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனையாகவே கருதப்படுகின்றது. 159 ஆசனங்களை வெற்றி கொண்டதன் மூலம் மூன்றிலரண்டை விடவும் அதிகமான பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டுள்ளது.