பிரதமர், அமைச்சரவை தொடர்வது நீதிமன்றை அவமதிப்பதாக அமையும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது அரசாங்கத்தின் அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு குறித்த பதவிகளில் செயற்பட மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க வேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனக ஈஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் மஹிந்த உள்ளிட்ட அவரது அரசாங்கம் அந்தப் பதவிகளை இனிமேலும் தொடர்ந்தால்,  அது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான குற்றமாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்…

பஹ்ரைன் பாராளுமன்றத்திற்கு அதிக எண்ணிக்கையான பெண்கள் தெரிவு

பஹ்ரைன் பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிகாரிகளால் வர்ணிக்கப்படும் வகையில் வரலாற்றில் முதல் தடவையாக பஹ்ரைன் பாராளுமன்றத்திற்கு அதிக எண்ணிக்கையான பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பஹ்ரைனைப் பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டுத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என பஹ்ரைன் குடிமக்களுக்கான அமைப்பின் பேச்சாளர் மொஹமட் அல்-செய்யிட் அல்-அரபிய்யா ஆங்கில செய்திச் அலைவரிசைக்குத் தெரிவித்தார். உண்மையிலேயே எமது பாராளுமன்றத்தில் அதிக பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள்,இது உண்மையில்…

ரணில்தான் எமது பிரதமர்: ஐ.தே. முன்னணி தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். மேலும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பிரதமாராக ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு எவரையும் பிரதமராக தெரிவு செய்யப்போவதில்லையென்றும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போதே இந்த இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி…

பிரதமர், அமைச்சர்கள் பதவி வகிக்க முடியாது

பிரதமர்  பதவியிலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியிலும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கடமைகளை முன்னெடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால தடை விதித்தது. அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை வகித்த 28 பேருக்கும் இராஜாங்க அமைச்சர் பதவியை வகித்த 13 பேருக்கும் பிரதி அமைச்சர் பதவி வகித்த 8 பேருக்கும் அந்த பதவிகளில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.