பாராளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்கு எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழு
எம்.எப்.எம்.பஸீர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்யவென எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் நளின் பெரேரா இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளார். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பூரண நீதியரசர்கள் குழுவொன்றின் முன்னிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டுமென பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை…