சோமாலியாவில் தானும் நபி எனத் தெரிவித்த மதகுருவின் சமயத் தலத்தின் மீது தாக்குதல்
அல்-–ஷபாப் துப்பாக்கிதாரியொருவரும் கார்க்குண்டு தற்கொலைத் தாக்குதல்தாரியொருவரும் கடந்த திங்கட்கிழமை மத்திய சோமாலியாவின் மதத் தலமொன்றில் மேற்கொண்ட தாக்குதலில் மதகுரு ஒருவரும் மேலும் ஒன்பது பேரும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
முகாமொன்றினுள் இருந்த மதகுரு, பதின்ம வயதினர் மற்றும் பெண்கள் உள்ளடங்கலாக 10 பேர் கிளர்ச்சிக்காரர்களால் கொல்லப்பட்டதாக மத்திய நகரான கல்கயோவிலிருந்து தொலைபேசி மூலமாக பொலிஸ் மேஜர் அப்துர்ரஹ்மான் அப்துல்லாஹி…