சபா­நா­யகர் சிறைக்கு செல்லத் தயா­ரா­கட்டும்

இந்த நாட்டில் மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் பாரா­ளு­மன்­றத்தை கூட்டும் சபா­நா­யகர் சபையை தவ­றாக வழி­ந­டத்­து­வது சிறை­வாசம் அனு­ப­விக்கும் குற்­ற­மாகும். ஆகவே சபா­நா­யகர் சிறைக்கு செல்லத் தயா­ராக வேண்­டு­மென ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் தெரி­விக்­கின்­றனர். தனது சுய­புத்­தி­யு­டனா சபா­நா­யகர் செயற்­ப­டு­கின்றார் என்ற கேள்வி எழும்­பு­கின்­றது. ஆகவே அவரை மருத்­துவ பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறு­கின்­றனர். பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் நேற்று ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் நடத்­திய…

சிரிய கிளர்ச்சிக்காரர்களால் நான்கு வயதுச் சிறுமி தாயிடம் ஒப்படைப்பு

தந்தை இறந்­து­விட்­டதால் நான்கு வயதுச் சிறு­மியின் பரா­ம­ரிப்பு தொடர்பில் எழுந்த முரண்­பாட்­டை­ய­டுத்து சிரியக் கிளர்ச்­சிக்­கா­ரர்­களின் இறுதிக் கட்­டுப்­பாட்டுப் பிர­தே­ச­மான இட்­லிப்­பி­லுள்ள நிர்­வாகம் அச்சிறு­மியை அவ­ரது பெல்­ஜிய நாட்டைச் சேர்ந்த தாயிடம் கடந்த திங்­கட்­கி­ழமை ஒப்­ப­டைத்­தது. இளம் சிவப்பு நிற மேலங்­கி­யொன்றை அணிந்­து­கொண்டு கையில் கரடி பொம்மை பரி­சி­னையும் சுமந்­த­வாறு துருக்­கிய எல்­லை­யி­லுள்ள தனது தாயை சந்­திப்­ப­தற்­காக அழைத்து வரப்­ப­டு­வதை ஏ.எப்.பி. ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் நேரில் கண்­டுள்ளார்.…

நான் கொலை செய்ய சூழ்ச்சி செய்தேன் என்றால் என்னை சிறையில் அடை­யுங்கள்

தான் தேர்­தலில் தோற்­றி­ருந்தால் தன்னை ஆறடி நிலத்தின் கீழ் புதைத்­தி­ருப்பார் என மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்­திய ஜனா­தி­பதி, இன்று அவ­ரையே பிர­த­ம­ராக்­கி­விட்டு ஆட்சிக்கு கொண்டு­வந்த எம்மை கொலை­கா­ரர்கள், சூழ்ச்­சிக்­கா­ரர்கள் என குற்றம் சுமத்­து­கின்றார். நான் கொலை செய்ய சூழ்ச்சி செய்தேன் என்றால் ஆதா­ரத்தை நிரூ­பித்து என்னை சிறையில் அடை­யுங்கள் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பினர் ஆசு…

அமர்வுகளை புறக்கணித்த ஆளும் தரப்பு எம்.பி.க்கள்

ஆளும் கட்­சி­யாக ஜனா­தி­ப­தியால் கூறப்­படும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பினர் நேற்­றைய தினமும் பாரா­ளு­மன்ற அமர்­வு­களை புறக்­க­ணித்­தனர். அத்­துடன், நவம்பர் மாதம்  14ஆம் திகதி  தொடக்கம் 23 ஆம் திகதி வரையில் நடை­பெற்ற சபை  அமர்­வுகள்  அர­சி­ய­ல­மைப்பு மற்றும்  பாரா­ளு­மன்ற நிலை­யியல் கட்­ட­ளைக்கு அமைய இடம்­பெ­ற­வில்­லை­யென ஆளும் கட்­சி­யினர் கூறி­யுள்­ள­துடன், அன்­றைய தினங்­களின் பாரா­ளு­மன்ற ஹன்சார்ட் அறிக்­கை­யினை நீக்க வேண்­டு­மென சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விற்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்­ளனர்.