கனுகெட்டியவில் முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கிரை
புத்தளம்- குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள கனுகெட்டிய நகரில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று நேற்று முன்தினம் இரவு தீக்கிரையாகியுள்ளது. கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு தீயில் எரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பாணந்துறை நகரில் இவ்வாறு முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.…