பஹ்ரைன் பாராளுமன்றத்திற்கு அதிக எண்ணிக்கையான பெண்கள் தெரிவு
பஹ்ரைன் பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிகாரிகளால் வர்ணிக்கப்படும் வகையில் வரலாற்றில் முதல் தடவையாக பஹ்ரைன் பாராளுமன்றத்திற்கு அதிக எண்ணிக்கையான பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பஹ்ரைனைப் பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டுத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என பஹ்ரைன் குடிமக்களுக்கான அமைப்பின் பேச்சாளர் மொஹமட் அல்-செய்யிட் அல்-அரபிய்யா ஆங்கில செய்திச் அலைவரிசைக்குத் தெரிவித்தார்.
உண்மையிலேயே எமது பாராளுமன்றத்தில் அதிக பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள்,இது உண்மையில்…