‘ஒபெக்’ கிலிருந்து விலகும் கத்தாரின் திடீர் அறிவிப்பு
பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்’ அமைப்பிலிருந்து விலகப்போவதாக கத்தார் அறிவித்துள்ளமையானது கச்சா எண்ணெய் சந்தையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளிடையே நிலவும் முறுகல் நிலையை இது மேலும் மோசமாக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டி அந்த நாட்டுடன் சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் மிகப்பெரிய பின்னடைவையும், பொருளாதார பாதிப்பையும்…