மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட  சிறுமி சவூதி படையினரால் மீட்பு

ஜித்தாவில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட சிறுமி சவூதி படையினரால் மீட்கப்பட்டதோடு சிறுமியை மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நபரொருவரை போதைப் பொருள் வைத்திருக்கின்றார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் துரத்திச் சென்றபோது சிறுமியொருவரை பிடித்திழுத்து மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதோடு துப்பாக்கிப் பிரயோகத்திலும் ஈடுபட்டார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸார் அவரை சரணடையுமாறு கட்டளையிட்டனர் எனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் குறித்த நபர் சகட்டுமேனிக்கு…

இலங்கையிலும் ஜனாதிபதிகளுக்கு மனநிலை பரிசோதனை வேண்டும்

ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் என்னை நேரடியாக விமர்சித்து வருகின்றார். நான் ஜனாதிபதியாகியிருந்தால் அரசியலமைப்பினை மீறியோ, நம்பிக்கை துரோகம் செய்தோ, யாரோ ஒரு தந்தைக்கு எழுதிய புத்தகத்தை நான் சொந்தம் கொண்டாடியிருக்க மாட்டேன் என பீல்ட் மார்ஷால் சரத் பொன்சேகா தெரிவித்தார். அமெரிக்காவில் ஜனாதிபதிக்கும் மனநிலை பரிசோதனை செய்யப்படும், அதேபோல் இலங்கையிலும் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிகழ்கால அரசியல் சூழல் குறித்து தனது கருத்தை முன்வைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர்…

தெற்காசியாவில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது

ஆப்கானிஸ்தான் - தலிபான்களுக்கு இடையே  நடக்கும் போரை நிறுத்த பாகிஸ்தான் முன் வர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து  செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் கூறும்போது, ’அமைதி குறித்து ஐக்கிய நாடுகள் சபை, இந்திய பிரதமர் மோடி  ஆகியோர் தெற்கு ஆசியாவில் எடுக்கும் முயற்சிகளுக்கு  அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் அமைதி ஏற்பட ஒவ்வொரு நாடும் முன்வர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானில் 40 வருடங்களாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆப்கானிஸ்தானில்…

பட்ஜட் சமர்ப்பிக்கப்படாவிடின் அரச நிறுவனங்களுக்கு நெருக்கடி

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படாமல்  இருப்பதால் ஜனவரி முதல் அரச நிறுவனங்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். அதனால் இடைக்கால வரவு செலவு திட்டத்தையேனும் சமர்ப்பித்து நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெவிக்கையில், அடுத்த வருட அரச…