அதிர்ச்சி தரும் போதை மாபியாவின் ஊடுருவல்
பலப்பிட்டிய - பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளமையானது நாட்டினுள் போதைப் பொருள் எந்தளவு தூரம் ஊடுருவித் தாக்கம் செலுத்துகிறது என்பதை உணர்த்தி நிற்கிறது. இது இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 2777 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 234 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளே இவ்வாறு நேற்றுக் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையில் இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் சுமார் 5166…