நிறைவேற்று அதிகாரம்: சூனியக்காரனின் மந்திரக்கோல்
உங்கள் வீட்டுக்கு அருகே அழுக்கான, ஆபத்தான, விழுந்தால் புதைந்துவிடக்கூடிய, துர்நாற்றம் வீசக்கூடிய, நோய்களைப் பரப்பும் ஒரு புதைகுழி இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.
அதன் தீங்குகளிலிருந்து நீங்கள் எப்படித் தப்புவீர்கள்? நடக்கும்போது அதன் அருகே நடக்காமல் அதை விட்டு விலகி நடப்பீர்கள். விழுந்துவிடாமல் அதைச் சுற்றித் தடைகளை அமைப்பீர்கள், துர்நாற்றம் உங்கள் வீட்டுக்குள் புகாமல் வீட்டு ஜன்னல்களை மூடிவைப்பீர்கள். அதையும் தாண்டி நோய் வந்தால் வைத்தியரை நாடுவீர்கள்.
இவைகள் எல்லாம் தீர்வுகளல்ல, தடுப்புகள். ஒரு தீங்கிலிருந்து…