போதையில் வாகனம் செலுத்தி விபத்தில் மூன்று பேரை பலியெடுத்த நபர் கைது
மதுபோதையில் வாகனம் செலுத்திய சந்தேக நபரொருவரால் ஏற்பட்ட விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் சந்தேக நபரான வாகன சாரதியும் காயமடைந்துள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கல்கிஸை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில் கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதியில் கல்கிஸை நீதிமன்றத்திற்கு…