மைத்திரி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்
மஹிந்தவின் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க மந்திரிகளுக்கு கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டது. விலையை அதிகரித்தமையே மஹிந்தவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போனது என்று கூறியதன் மூலம் தான் குற்றவாளி என்பதையும் ஒப்புக்கொண்டதுடன், மஹிந்த ராஜபக் ஷவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக்கொடுத்துவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். தமது குற்றங்களை இப்போதாவது ஒப்புக்கொண்டு மைத்திரியும் மஹிந்தவும் நல்லாட்சிக்கு இடமளிக்க வேண்டும்…