தெற்காசியாவில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது

ஆப்கானிஸ்தான் - தலிபான்களுக்கு இடையே  நடக்கும் போரை நிறுத்த பாகிஸ்தான் முன் வர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து  செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் கூறும்போது, ’அமைதி குறித்து ஐக்கிய நாடுகள் சபை, இந்திய பிரதமர் மோடி  ஆகியோர் தெற்கு ஆசியாவில் எடுக்கும் முயற்சிகளுக்கு  அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் அமைதி ஏற்பட ஒவ்வொரு நாடும் முன்வர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானில் 40 வருடங்களாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆப்கானிஸ்தானில்…

பட்ஜட் சமர்ப்பிக்கப்படாவிடின் அரச நிறுவனங்களுக்கு நெருக்கடி

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படாமல்  இருப்பதால் ஜனவரி முதல் அரச நிறுவனங்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். அதனால் இடைக்கால வரவு செலவு திட்டத்தையேனும் சமர்ப்பித்து நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெவிக்கையில், அடுத்த வருட அரச…

கஷோக்ஜியின் கொலையுடன்  பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்பது ‘பூச்சிய சந்தர்ப்பமாகும்’

கடந்த செவ்வாய்க்கிழமை மூடிய கதவுகளுக்குப் பின்னால் அமெரிக்க சீ.ஐ.ஏ இன்  பணிப்பாளர் ஜினா ஹஸ்பெல் விளக்கமளித்ததைத் தொடர்ந்து ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையுடன் சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்பதற்கு 'பூச்சிய சந்தர்ப்பமே' இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட செனட் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனக்கு ஏலவே இருந்த எனது கருத்து இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சி அங்கத்தவரான பொப் மெனன்டேஸ் தெரிவித்தார். …

அதிகரிக்கும் நுண் கடன் நிறுவனங்களின் ஊடுருவல்

போருக்குப் பின்னரான இலங்கையில் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்சினையே நுண்கடன் தொல்லையாகும். 'மைக்ரோ பினான்ஸ்' என்றழைக்கப்படும் சில நிதி நிறுவனங்கள் நுண் கடனை வழங்குகின்றன. நுண் கடன் நிறுவனங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் செயற்படுகின்றன. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையே இவை பிரதான இலக்காகக் கொண்டுள்ளன. இந் நுண் கடன் முறை என்பது இலங்கையில் புதிதாக செயல்முறையில் காணப்படும் திட்டமாக இயங்குகின்றது. கூடுதலான மக்கள் இந்த முறையில் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு முன் வருகின்றனர். அதிகளவிலான வட்டியை…