டைம்ஸ் பத்திரிகையின் 2018 சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் கஷோக்ஜியின் பெயர்

டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் கொல்லப்பட்ட சவூதி பத்திரிகையாளர் ஜமால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜமால் கஷோக்ஜி இடம்பெற்றிருப்பது குறித்து டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடும் போது, ''சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர். இவர் சவூதி இளவரசர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது” என்று கூறியுள்ளது. சவூதி அரசையும் அதன் இளவரசர் முகமம்து பின் சல்மானையும் கடுமையாக  விமர்சித்தவர் பத்திரிகையாளர் ஜமால். இவர் கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி துருக்கி…

வெவ்வேறு விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற மோட்டார் வாகனங்களுடன் தொடர்புடைய விபத்துக்களில் மாத்திரம்  சிக்கி ஐந்து  பேர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலை  6 மணிமுதல் நேற்றுக் காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள்ளேயே இந்த ஐந்து  பேரும் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள்  கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மற்றும் மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவரும் , மோட்டார் சைக்கிள் பாதசாரிகளின் மீது மோதுண்டு…

ஆப்கான் பாதுகாப்பு படையை இலக்குவைத்து தற்கொலை தாக்குதல்: நால்வர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் முக்கிய புலனாய்வு அமைப்பின் உறுப்பினர்களை இலக்குவைத்து காபூலில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இரவு நேர சோதனைகளை நிறைவுசெய்து திரும்பிக் கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகளை இலக்குவைத்து நேற்று இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இத்தாக்குதலானது பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டு அணியை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதல் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு…

ஐ.எஸ். உடனான போரில் வெற்றி ஈராக்கில் மக்கள் கொண்டாட்டம்

ஐ.எஸ். தீவிரவாதிகளை வெற்றி கொண்டு  ஒரு வருடம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஈராக் அரசு அதனை கொண்டாடியுள்ளது. பல ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த போரை ஈராக்  அரசு கடந்த டிசம்பர் மாதம் வெற்றி கொண்டது.  இதனைக் கொண்டாடும் விதமாக திங்கட்கிழமை தேசிய விடுமுறை அறிவித்து ஈராக் கொண்டாத்தில் ஈடுபட்டது. மேலும் அரசு சார்பில் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.  அந்நாட்டின் தேசியக் கொடி மற்றும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், இந்தக் கொண்டாட்ட தினத்தில், அரச தூதரக அலுவலங்கள் போன்றவற்றைக் காண  பொதுமக்கள்…