தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதால் பாகிஸ்தானுக்கு ஒரு டொலரேனும் வழங்க கூடாது
அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு ஒரு டாலர் கூட அமெரிக்கா நிதியுதவி செய்ய கூடாது. சில விஷயங்களில் எந் தெந்த நாடுகளுடன் உறவு வைத்து கொள்வது, எந்தெந்த நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து நன்கு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘தி அட்லான்டிக்’ இதழுக்கு அளித்த பேட்டியில் நிக்கி ஹேலி மேலும் கூறியிருப்பதாவது,
நாம் கண்ணை மூடிக் கொண்டு ஏராளமான நிதியுதவிகளை அளித்து வருகிறோம். அதற்குப்…