ஜனாதிபதி முறையை ஒழிக்க இன்னும் தீவிரம் வேண்டும்

அரசியல் ஜனநாயக மரபுகளையும் மீறி, ஜனாதிபதி அகங்காரமாக, ஆணவமாகப்  பேசுகின்ற நிலைவரத்தை வைத்துப் பார்க்கின்றபோது இந்த ஜனாதிபதி முறை இவ்வாறான அரசியல்வாதிகளை கொண்டுவந்து விடுமென்ற அச்சத்தினால் இந்த முறைமையினை இல்லாதொழிக்க வேண்டும் என்பதிலே இன்னும் தீவிரமாக செயற்படவேண்டும் எனும் நிலை ஏற்பட்டுள்தென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  செயற்குழுக் கூட்டம் செயற்குழுவின் செயலாளர் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷாவின் ஏற்பாட்டில்  கட்சியின்…

பர்தாவும் கல்வியும்

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின்பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றி நடப்பதென்பது அடிப்படை உரிமையாகும். இதனைத் தடை செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அந்தவகையில் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், அலுவலங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் முதல் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அவர்களின் மத விழுமியங்களைப் பின்பற்றி உடைகளை அணிந்துகொள்ள பூரண சுதந்திரமுள்ளது. இச்சுதந்திரத்தை யாராவது…

நிறைவேற்று அதிகாரம்: சூனியக்காரனின் மந்திரக்கோல்

உங்கள் வீட்டுக்கு அருகே அழுக்கான, ஆபத்தான, விழுந்தால் புதைந்துவிடக்கூடிய, துர்நாற்றம் வீசக்கூடிய, நோய்களைப் பரப்பும் ஒரு புதைகுழி இருக்கின்றது  என்று வைத்துக் கொள்வோம். அதன் தீங்குகளிலிருந்து நீங்கள் எப்படித் தப்புவீர்கள்? நடக்கும்போது அதன் அருகே நடக்காமல் அதை விட்டு விலகி நடப்பீர்கள். விழுந்துவிடாமல் அதைச் சுற்றித் தடைகளை அமைப்பீர்கள், துர்நாற்றம் உங்கள் வீட்டுக்குள் புகாமல் வீட்டு ஜன்னல்களை மூடிவைப்பீர்கள். அதையும் தாண்டி நோய் வந்தால் வைத்தியரை நாடுவீர்கள். இவைகள் எல்லாம் தீர்வுகளல்ல, தடுப்புகள். ஒரு தீங்கிலிருந்து…

நாட்டில் அமைதி நிலவ வேண்டி பொதுபலசேனா விசேட பூஜை

நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலான நிலைமை, ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு தீர்வுகண்டு நாட்டில் ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்டும் நோக்கில் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான சிறப்புப் பூஜை நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. மேற்படி சிறப்புப் பூஜை நிகழ்வானது விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள விகாரையில் ஆரம்பமாகியதுடன், தேரர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து மகாசங்க தேரர்களின்…