பிரேரணையை ஏற்கமாட்டோம்
நாட்டில் அரசாங்கமாகக் கருதப்படும் அமைச்சரவைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போது, ஆளுங்கட்சி இன்றி சபாநாயகர் கருஜய சூரிய பாராளுமன்றத்தை கூட்டியுள்ளமை சட்டவிரோதமாகும். அதன் காரணமாகவே நாம் பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்தோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
நாளை (இன்று) அல்லது, நாளை மறுதினம் (நாளை) உயர் நீதிமன்றத்தினால்…