எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு

அரசாங்கதின்  பங்காளியாக இணையாது எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக  நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியால் நேற்று புதன்கிழமை  பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றிய மாவை சேனாதிராஜா எம்.பி கூறுகையில், ரணில் விக்கிரமசிங்க பிரதம அமைச்சராக நியதிக்கப்படுவதற்கான நம்பிக்கைப்…

1MDB அறிக்கையை மாற்றியமைத்தமை தொடர்பில் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் றஸாக் மீது குற்றச்சாட்டு

முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் றஸாக் மீது நிதி மோசடி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் 1MDB கணக்காய்வு அறிக்கையை அரசாங்க முதலீட்டு நிதியமாக மாற்றியமைத்தமை தொடர்பில் மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்து பதவியிழந்த நஜீப் 1MDB சபைக் கூட்டத்தில் ஜோ லோ என பரவலாக அறியப்பட்ட தப்பியோடிய நிதியளிப்பாளரான லே டீக் ஜோ பங்குபற்றியிருந்தமையை 2016 ஆம் ஆண்டு கணக்காய்வு அறிக்கையில் ஒரு பகுதயில் மாற்றம் செய்தார் என நஜீப் றஸாக் மீது குற்றம்…

ஒக்டோபர் சூழ்ச்சியின் பின்னணியில் ரணிலே

பிரதமர் ஆசனத்தில் மஹிந்தவை அமர்த்தவோ அல்லது ரணிலை அமர்த்தவேண்டும் என்பதோ எமது பிரச்சினையல்ல. அரசியலமைப்பினை பார்த்துக்க வேண்டும் என்பதே எமது ஒரே நோக்கம் அதற்காகவே நாம் போராடினோம். ஒக்டோபர் புரட்சியின் முதன்மை நடிகர்கள் மைத்திரி -மஹிந்தவாக இருக்கலாம் ஆனால் சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் எனக் கூறிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக ரணில் மீண்டும் பிரதமாராக நியமித்து எஞ்சியுள்ள ஒரு வருடத்தில் எந்த மாற்றமும் இடம்பெறப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இன்றைய தினம்  பாராளுமன்றத்தில்  ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர்…

இஸ்ரேலுக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தை ஜெரூசலத்திற்கு நகர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல்

ஆசிய நாட்டு அயல் நாடுகளுடன் பல தசாப்தகால கொள்கையில் விரிசலை ஏற்படுத்தக்கூடியதும், ஆசிய அயல் நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடியதுமான ஆபத்துடைய டெல் அவிவில் அமைந்துள்ள அவுஸ்திரேலியத் தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றுவதா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கலந்துரையாடலில் ஈடுபட்டதாக குறித்த விடயத்துடன் தொடர்புடைய இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இங்கு அமைச்சரவை கூடியபோது இஸ்ரேலுக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தை ஜெரூசலத்திற்கு நகர்த்துவது தொடர்பான விடயம் கலந்துரையாடப்பட்ட…