அனைத்து மதத்தவர்களும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வு
வடக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை நாம் அறிவோம். நாம் உருவாக்க முயற்சிக்கும் அரசியலமைப்பில் ஒற்றை ஆட்சிக்குள் பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்கத் தயாராக உள்ளோம். தமிழ் மக்களுடன் கலந்துரையாடி சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியலமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டிலிருந்து நாம் மாறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.…