பாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்
பாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ துறையில் உயர் கல்வியினை தொடர்வதற்கான புலமைபரிசில்களை அன்பளிப்புச் செய்துள்ளது. பாகிஸ்தானிய அரசின் இலங்கைக்கான தொழில்நுட்ப உதவித் திட்டத்தின் கீழ் இப்புலமைபரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை உயர் ஸ்தானிகர் பணியகத்திலே சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மக்களின் மேம்பாட்டிற்கான இரு நட்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின்…