ஐந்தாவது தடவையாகவும் பிரதமரானார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க ஐந்தாவது தடவையாகவும்  இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். அத்துடன் தேசிய அரசாங்கத்தின்  புதிய அமைச்சரவை இன்றைய தினம்  பதவியேற்கும் எனவும் கூறப்படுகின்றது. கடந்த 58 நாட்கள் அரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மீண்டும் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அமைக்கப்பட்டதுடன் ஐக்கிய தேசியக்…

உளவியல் நோக்கில் சமகாலம்

மனிதனின் சுகாதார நிலை மேம்பாட்டுக்கு உடல், உள்ளம், ஆன்மிகம் ஆகிய 3 விடயங்களும் முக்கியமானவை. ஒரு மனிதன் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றபோது, அப்பாதிப்பானது பெருமளவில் அம்மனிதனை மாத்திரமே பாதிப்புக்குள்ளாக்கின்றது. ஆனால், அதே மனிதன் உளரீதியான பாதிப்புக்குள்ளாகின்றபோது, அதன் தாக்கம் அம்மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. ஒரு நாட்டின் அபிவிருத்தியில் உள ஆரோக்கியத்தின் பங்கு அத்தியாவசிமானதொன்றாகும். ஏனெனில, பொருளாதாரத்திற்கும் உளநோய்களுக்கும் இடையில் தொடர்புகள் நிலவுகின்றன. ஒருவர் உள நோயினால் பாதிக்கப்படுவாராயின் அப்பாதிப்பானது…

பிரான்ஸ் ஆர்ப்பாட்டத்தால் எகிப்தில் மஞ்சள் அங்கி விற்பனைக்கு கட்டுப்பாடு

பிரான்ஸ் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களின் பாணியில் ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­து­வதை தடுப்­ப­தற்­காக எகிப்தில் மஞ்சள் அங்கி விற்­ப­னைக்கு கட்­டுப்­பாடு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. எகிப்தில் 2011 மக்கள் எழுச்சி போராட்­டத்தின் ஆண்டு நிறைவு நெருங்­கி­யுள்ள நிலை­யி­லேயே இந்த கட்­டுப்­பாடு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு உப­க­ரண விற்­ப­னை­யா­ளர்கள் ஏற்­கப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கே அங்­கி­களை மொத்த விற்­பனை செய்ய முடியும் என்றும் சில்­லறை விற்­ப­னை­யா­ளர்கள் பொலிஸ் அனு­மதி பெற வேண்டும் என்றும் கட்­டுப்­பாடு…

கொலைகார சாரதிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குக

நாட்டில் அதிகரித்துச் செல்லும் வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதிலும் குறிப்பாக மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிரான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு- கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்துகள் உணர்த்தி நிற்கின்றன. மது போதையில் கார் ஒன்றைச் செலுத்தி வந்த நபர் ஒருவர், வீதியில் ஓரமாக நின்றிருந்த இருவரை மோதித் தள்ளிவிட்டுச் சென்றது மாத்திரமன்றி, சிறிது தூரம் சென்று எதிரே வந்த வேன் ஒன்றையும் மோதியுள்ளார்.  இச்…