சிறுபான்மைக்கு ரணில் என்ன கைமாறு செய்யப் போகிறார்?
இலங்கை அரசியல் வரலாற்றில் கரும்புள்ளிகள் படிந்த மோசமான நாட்களாக கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை கணிக்க வேண்டியிருக்கிறது. இலங்கை அரசியலில் என்றுமில்லாதவாறு அரசியல் அதிகாரத்திலுள்ளவரால் அரசியலமைப்பு மீறப்பட்டமையே இதற்கான பிரதான காரணமாகும். எனினும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை காரணமாக நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு புத்துயிரளிக்கப்பட்டிருக்கின்றமை ஆறுதல் தருவதாகும்.
இதற்கப்பால், ஜனாதிபதியின் இந்த திடீர் அரசியல் நடவடிக்கை காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பான ஐக்கிய தேசியக்…