வீதி விபத்துக்களில் 10 மாதங்களில் 2590 பேர் பலி

நடப்பாண்டில் இதுவரையில் 2481 வீதி விபத்துக்கள் பதிவாகியள்ளதுடன், மேற்படி விபத்துக்களில் சிக்கி சுமார் 2590 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த 2481 விபத்துக்களும் ஜனவரி முதலாம்  திகதி தொடக்கம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே பதிவாகியுள்ளன. இவ்வாறான வீதி விபத்துக்களில் சிக்கி  சுமார் 792  பேர் வரையிலான பாதசாரிகள்  உயிரிழந்துள்ளதாக வீதிப்பாதுகாப்புக்கான தேசிய மன்றத்தின் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், மோட்டார் சைக்கிளுடன்…

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதால் பாகிஸ்தானுக்கு ஒரு டொலரேனும் வழங்க கூடாது

அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு ஒரு டாலர் கூட அமெரிக்கா நிதியுதவி செய்ய கூடாது. சில விஷயங்களில் எந் தெந்த நாடுகளுடன் உறவு வைத்து கொள்வது, எந்தெந்த நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து நன்கு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்  என ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘தி அட்லான்டிக்’ இதழுக்கு அளித்த பேட்டியில் நிக்கி ஹேலி மேலும் கூறியிருப்பதாவது, நாம் கண்ணை மூடிக் கொண்டு ஏராளமான நிதியுதவிகளை அளித்து வருகிறோம். அதற்குப்…

கீத் நொயார் விவகாரம்: விசாரணைகள் நிறைவடைந்ததாக சி.ஐ.டி. நீதிமன்றத்துக்கு அறிவிப்பு

'த நேஷன்' பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்ட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை சி.ஐ.டி. நிறைவு செய்துள்ளதாக நேற்று கல்கிசை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது. இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணைப் பிரிவின் சார்பில் மன்றில் ஆஜரான பொலிஸ் கான்ஸ்டபிள் சில்வா மேலதிக அறிக்கை…

கஷோக்ஜி கொலையாளிகளை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்த கோரிக்கையை சவூதி நிராகரித்தது

சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையுடன் தொடர்புடையவர்களை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்த கோரிக்கையை சவூதி அரேபியா நிராகரித்துள்ளது. தமது நாட்டு பிரஜைகளை எந்த காரணம் கொண்டும் வேறு நாட்டிடம் ஒப்படைக்கமாட்டோம் என சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அடெல் அல் ஜுபைர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பாக சவூதியின் முன்னாள் புலனாய்வு துறை பிரதானி அஹ்மட் அல் அஸிரி மற்றும் அரச குடும்பத்தின் முன்னாள் ஆலோசகரான சவுட் அல் குவட்டானி உள்ளடங்களாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை…