உம்ரா விவகாரம் நிர்க்கதிக்குள்ளானவர்கள் சவூதி சென்றடைந்தனர்

காத்­தான்­குடி, அக்­க­ரைப்­பற்று மற்றும் நிந்­தவூர் பகு­தி­க­ளி­லி­ருந்து உம்ரா பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்­காக கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டு முகவர் நிலைய மொன்­றினால் நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டி­ருந்த 38 பய­ணி­களும் 6 நாட்­களின் பின்பு நேற்று மாலை உம்ரா கட­மைக்­காக சவூதி அரே­பி­யாவைச் சென்­ற­டைந்­தனர். குறிப்­பிட்ட உம்ரா பய­ணி­க­ளுக்­கான விமான டிக்­கட்­டு­களைப் பதிவு செய்த கொழும்பைச் சேர்ந்தஅம்ஜா டிர­வல்­ஸுக்கு காத்­தான்­கு­டியைச் சேர்ந்த உம்ரா முகவர் நிலைய உரி­மை­யாளர் விமான டிக்கட் கட்­ட­ணங்­களை வழங்­கா­மை­யி­னா­லேயே…

அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்க தயார்

புதிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் அமைச்சுப் பத­வியை ஏற்­கா­தி­ருக்கத் தயார் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யு­தீனும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணே­சனும் தெரி­வித்­துள்­ளனர். நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்­றக்­குழுக் கூட்­டத்­தின்­போதே இவ்­விரு கட்சித் தலை­வர்­களும் இக் கருத்தை முன்­வைத்­துள்­ளனர். ஐக்­கிய தேசிய முன்­னணி தனித்து ஆட்­சி­ய­மைக்­கும்­பட்­சத்தில் அர­ச­மைப்பின் 19 ஆவது திருத்­தத்­திற்­க­மைய அமைச்­ச­ரவை அந்­தஸ்த்­துள்ள அமைச்­சு­களின்…

எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்குவதில் இழுபறி

பாரா­ளு­மன்­றத்தின் பிர­தான எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக்ஷ நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்தார். எனினும், எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷ நிய­மிக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து சம்­பந்­தனே எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நீடிக்க அனு­ம­திக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அது தொடர்பில் ஆராய தெரி­வுக்­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் சபையில் நேற்று ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளினால் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.…

உம்ரா முகவரின் தவறால் யாத்திரிகர்கள் நிர்க்கதி

காத்­தான்­குடி, அக்­க­ரைப்­பற்று மற்றும் நிந்­தவூர் பகு­தி­க­ளி­லி­ருந்து உம்ரா பய­ணத்­துக்­காக உம்ரா முகவர் நிலை­ய­மொன்­றினால் அழைத்­து­வ­ரப்­பட்ட 40 உம்ரா பய­ணிகள் உம்ரா முகவர் நிலை­யத்தின் தவ­றினால் கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் தொடர்ந்தும் நிர்க்­க­திக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் தொடர்ந்தும் மாபோலை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் தங்­கி­யி­ருக்­கின்­றனர். குறிப்­பிட்ட 40 உம்ரா பய­ணி­களில் 12 பேர் பெண்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. இவர்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு மத்­தியில் முகவர் நிலை­யத்­தினால்…