இலங்கையின் வெளிவிவகார அலுவல்கள் அல்லது கொள்கை மீதான ஒரு பார்வை
ஒரு தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை என்பதை மிக எளிமையாக விளங்கிக் கொள்வதாக இருந்தால், இரு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கலாம். நிலையான காரணிகள் அல்லது மாறா காரணிகள் மற்றது நிலையற்ற காரணிகள் அல்லது மாறும் காரணிகள். நிலையான காரணிகள் எனப்படுபவை நாட்டின் புவியியல் அமைவிடம் தரைதோற்ற பருமன், நாடு கொண்டிருக்கும் உள்ளக இயற்கை வளங்கள் போன்றனவாகும்.