ஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்புக்கு செவிசாய்ப்பார்

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நேற்று தீர்ப்பு வழங்கிய பின்னர், உயர் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும்…

சிறுபான்மை கட்சிகளின் ஒருமித்த செயற்பாடு: சரியான நேரம் கூடிவந்துள்ளது அடுத்தவாரம் சந்திப்பு ஆரம்பம்

சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சரியான நேரம் தற்போது கூடிவந்துள்ளது. இந்நிலையில் அடுத்தவாரம் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்றில் கூடி சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். சிறுபான்மை கட்சிகளின் ஒன்றிணைந்த பயணம் குறித்து முஸ்லிம் கங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்திருந்த அழைப்பு  சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து அவரிடம் வினவியபோதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை…

ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தமை சட்டவிரோதமானது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை  கடந்த நவம்பர் 9 ஆம் திகதி   2096/70 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. பிரதமர் நீதியரசர்  நளின் பெரேரா தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்களே ஏகமனதாக இந்த தீர்ப்பை அறிவித்தனர். ஜனாதிபதியின் குறித்த வர்த்தமானி அறிவித்தலானது, அவரது சட்ட ரீதியிலான அதிகாரங்களுக்கு அப்பால் சென்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதனால் அது சட்ட வலுவற்றது எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்தது. அதனால் அந்த…