வீதியில் கண்டெடுத்த 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணத்தை பொலிஸில் ஒப்படைத்தார்
கொழும்பு, புறக்கோட்டைப் பிரதேசத்தில் வீதியொன்றிலிருந்து ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணத்துடன் கூடிய பார்சலொன்றைக் கண்டெடுத்த நடைபாதை வியாபாரியொருவர் அதனை கோட்டை பொலிஸ் மக்கள் தொடர்பு பிரிவினரிடம் கையளித்துள்ளார்.
கொழும்பு புறக்கோட்டைப் பகுதி வீதியொன்றிலிருந்து இந்தப் பார்சலை அப்பகுதியில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும், கொழும்பு –14 பகுதியைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி முபாரக் என்பவரே கண்டெடுத்துள்ளார்.
தான் கண்டெடுத்த பார்சலில் பணம் அடங்கியிருப்பதை அறிந்த அவர் தனது…