சம்பந்தனா? மஹிந்தவா? பெரும்பான்மை மூலம் தீர்மானித்துக்கொள்ளலாம்

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனா அல்­லது ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷவா எதிர்­கட்சித் தலைவர் என்­பதை பாரா­ளு­மன்றின் பெரும்­பான்­மையின் அடிப்­ப­டையில் தீர்­மா­னி­க்­கப்­படும் என ஐக்­கிய தேசிய கட்சி தெரி­வித்­துள்­ளது. எதிர்­கட்சித் தலை­வரை தெரிவு செய்­வதில் எழுந்­துள்ள சிக்கல் நிலை குறித்து விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளீன் பண்­டார மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இதே­வேளை நிலை­யியல் கட்­ட­ளையின் பிர­காரம் எதிர்­கட்­சி­த­லைவர் பத­வி­யினை யாருக்கு…

ஸ்கென்டினேவிய பெண்கள் இருவரைக் கொன்ற சந்தேக நபர் மொரோக்கோ அதிகாரிகளால் கைது

ஹை அட்லஸ் மலைப் பகு­தியில் வைத்து சுற்­றுலாப் பய­ணி­க­ளான ஸ்கென்­டி­னே­விய பெண்கள் இரு­வரைக் கொன்ற சந்­தேக நபர் மொரோக்கோ அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக உள்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது. குறித்த நபர் மொரோக்­கோவின் மிகப் பெரிய சுற்­றுலா மைய­மான மர்­ராக்­கெச்சில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார். கழுத்து அறுக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டி­ருந்த டென்மார்க் மற்றும் நோர்வே நாடு­களைச் சேர்ந்த இரு பெண்­க­ளது உடல்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஏனைய சந்­தேக நபர்கள் தேடப்­பட்டு வரு­வ­தாக அமைச்சு கடந்த…

முன்னாள் ஜனாதிபதி -முன்னாள் பிரதமர் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜ­பக்‌ஷ இந்த மாதத்தில் முன்னாள் பிர­த­ம­ராகி தற்­போது முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மாறி­யுள்­ள­தாக ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் சபையில் தெரி­வித்­தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமைஏற்­பட்ட எதிர்க்­கட்சி தலைவர் பதவி தொடர்­பான சர்ச்­சையின் போது தனது கருத்தை முன்­வைத்து உரை­யாற்றும் போதே ரவூப் ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இந்த…

வீதியில் கண்டெடுத்த 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணத்தை பொலிஸில் ஒப்படைத்தார்

கொழும்பு, புறக்­கோட்டைப் பிர­தே­சத்தில் வீதி­யொன்­றி­லி­ருந்து ஒரு இலட்­சத்து 90 ஆயிரம் ரூபா பணத்­துடன் கூடிய பார்­ச­லொன்றைக் கண்­டெ­டுத்த நடை­பாதை வியா­பா­ரி­யொ­ருவர் அதனை கோட்டை பொலிஸ் மக்கள் தொடர்பு பிரி­வி­ன­ரிடம் கைய­ளித்­துள்ளார். கொழும்பு புறக்­கோட்டைப் பகுதி வீதி­யொன்­றி­லி­ருந்து இந்தப் பார்­சலை அப்­ப­கு­தியில் நடை­பாதை வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு வரும், கொழும்பு –14 பகு­தியைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி முபாரக் என்­ப­வரே கண்­டெ­டுத்­துள்ளார். தான் கண்­டெ­டுத்த பார்­சலில் பணம் அடங்­கி­யி­ருப்­பதை அறிந்த அவர் தனது…