மைத்திரி – கோத்தா கொலை சதி விவகாரம்: நாமல் குமாரவின் தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட 39 ஜி.பி. தரவுகள் கண்டுபிடிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக் ஷ, சி.சி.டியின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் விவகாரத்தின் தகவல்களை வெளிப்படுத்திய ஊழல் தடுப்பு படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்டுள்ள பெருந்தொகை தரவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய குறித்த தொலைபேசி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கையேற்கப்பட்ட நிலையில் நீதிமன்ற…