பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால கணக்கறிக்கை
அடுத்தாண்டின் முதல் நான்கு மாதகாலத்திற்கான வரவு செலவுத்திட்ட இடைக்கால கணக்கறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க தேசிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி முன்னெடுத்த அரசியல் மாற்றங்களையடுத்து தேசிய அரசாங்கம் கலைக்கப்பட்டு…