மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் பயணம் தொடர் தோல்வியே

மஹிந்­தவின் அர­சியல் பயணம் தொடர் தோல்­வி­யையே சந்­தித்து வரு­கின்­றது. பிர­தமர் பத­விக்குப் போராடி படு­தோல்வி கண்டு இன்று மஹிந்த ராஜபக் ஷ எதிர்­கட்சித் தலைவர் பத­வி­யினை பொறுப்­பேற்­ப­திலும் போட்­டி­யிட வேண்­டிய அவ­சியம் எழுந்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். அலரி மாளி­கையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மஹிந்த ராஜபக் ஷ முன்­னெ­டுக்கும் அனைத்து…

எரிபொருள் விலை குறைப்பு; பிரதமர் ரணில்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தை  விலைக்கு ஏற்ப அனைத்து ரக பெற்றோல் மற்றும் டீசலின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப் போவதாக பாராளுமன்றத்தில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்படி அனைத்து ரக பெற்றோல் ஒரு லீற்றர் 10 ரூபாவாலும்,  ஆட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்திற்கமைய, 92 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின்…

2019 க்கான ஹஜ் கோட்டாவை அதிகரிப்பதே எனது முதற்பணி

எனது முதற்­பணி அடுத்த வரு­டத்­துக்­கான ஹஜ்­கோட்­டாவை அதி­க­ரித்­துப்­பெற்றுக் கொள்­வ­தாகும். சவூதி ஹஜ் அமைச்சு அடுத்த வரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அழைப்பு விடுத்­துள்­ளது. எதிர்­வரும் 27 ஆம் திகதி மக்­காவில் நடை­பெ­ற­வுள்ள இக்­க­லந்­து­ரை­யா­டலில் ஹஜ் கோட்டா அதி­க­ரிப்பை வலி­யு­றுத்­துவேன் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ராக மீண்டும் பத­வி­யேற்­றுள்ள அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். அமைச்சுப் பத­வியைப் பொறுப்­பேற்றுக் கொண்­டதும்…

சுதந்­திர ஊட­க­வி­ய­லாளர் லக்மால் டி சில்வா கொலை: நாட்­டை­விட்டு தப்பிச் சென்­ற மேஜர் நிரோஷன் கட்டாரில்

சுதந்­திர ஊட­க­வி­ய­லாளர்  லக்மால் டி சில்­வாவின் கொலை தொடர்பில் சந்­தேக நபராக அடை­யாளம் காணப்­பட்ட நிலையில், நாட்டை விட்டுத் தப்பிச் சென்­றுள்ள மேஜர் நிரோஷன் தற்­போது கட்­டாரில் தொழில் புரி­வ­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது. அவரைக் கைது செய்ய சி.ஐ.டி. முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்கை பிர­காரம் அவரின் மனை­வி­யிடம் முன்­னெ­டுக்­கப்ப்ட்ட விசா­ர­ணை­களில் அது தெரி­ய­வந்­த­தாக சி.ஐ.டி.  நேற்று கல்­கிசை மேல­திக நீதிவான் லோச்­சனா அபே­விக்­ர­ம­வுக்கு அறி­வித்­தது. இந்­நி­லையில் அவரைக் கைது செய்ய சர்­வ­தேச பொலிஸார் ஊடாக நட­வ­டிக்கை…