கரையும் வீடுகளும் கரைத்த பின்னணியும்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நிகழ்ந்த அரசியல் சுனாமி இந்நாட்டு அரசியலை எவ்வாறு காயங்களினால் பதிவாக்கியிருக்கிறதோ அவ்வாறே இலங்கையின் சரித்திர வரலாற்றில் 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியும் கண்ணீராலும், கவலையாலும், அழிவுகளினாலும் இந்நாட்டின் சரித்திர வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.
21ஆம் நூற்றாண்டைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி, துயரக் காவியமாக பதியச் செய்த 2004ஆம் ஆண்டின் சுனாமிக் கடற்கோள் பேரனர்த்தத்தின் பெரும் துயர நினைவுகள், அத்துயரை எதிர்கொண்டவர்களினதும் அவற்றை நேரில் கண்டவர்களினதும்…