எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்குவதில் இழுபறி
பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக் ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்க அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் அது தொடர்பில் ஆராய தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் சபையில் நேற்று ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.…