பேரம் பேசும் சக்தியை முஸ்லிம் தலைமைகள் இழந்துவிட்டன

அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டதன் மூலம் முஸ்லிம் அரசியலில் பேரம் பேசும் சக்தியையும் தனித்துவத்தையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இழந்து விட்டன என ஐக்கிய சமதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார். ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு காத்தான்குடி ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த மாநாட்டில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி உட்பட…

அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் கிடையாது

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், பல்வேறு ஊடக அறிக்கைகள் மூலம் அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் பெறவுள்ளதாக அறிவித்துள்ளதால் அவ்வாறு நிகழ்வதற்கு சாத்தியமுள்ளது. அதன் பிரகாரம் அமெரிக்கப் படையினர் வாபஸ் பெறப்படுவதால் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்குக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என ஆப்கானிஸ்தானின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். எமக்கு ஆலோசனை வழங்கிய, பயிற்சியளித்த, உதவிபுரிந்த சில ஆயிரம் வெளிநாட்டுப் படையினர் விலகிச் செல்வதால் எமது பாதுகாப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி…

ஆற்றில் நீராடசென்ற இருவர் நீரில் அடித்துச் சென்று பலி

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியிலுள்ள ஆற்றில் நீராடச்சென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்  இடம்பெற்றுள்ளது. ஹட்டன் விஜிராபுர பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தையுடைய இருவரும் உறவினர்களின் வீட்டுக்கு சென்றிருந்த வேளை குறித்த  ஆற்றில் நீராடச்சென்ற நிலையில்  இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 வயதுடைய அப்துர் ரஹ்மான் மற்றும் 42 வயதுடைய மொகமட் முஸ்தாக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…

நிவாரணங்களை துரிதப்படுத்துக

கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  வட மாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர்கள், இராணுவ தளபதி ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வெள்ள அனர்த்தம் முழுமையாக நீங்கும் வரை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்குத் தேவையான வசதிகளை தாமதமின்றி வழங்குமாறும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறும் அமைச்சரவை செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார் பிரிவுகளுக்கு ஜனாதிபதி…