புனித யாத்திரைக்கான விமான கட்டணத்தின் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதற்கு கேரள மாநில ஹஜ் கமிட்டி நன்றி
இந்தியாவில் இருந்து புனித யாத்திரைக்கான விமான கட்டணத்தில் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதற்கு கேரளா மாநில ஹஜ் கமிட்டி நன்றி தெரிவித்துள்ளது. நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை முதலாம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த…