ஊழல், மோசடிகள் எப்போதும் இரகசியமாகவே இருக்காது
அரச வளங்களை சேதப்படுத்தி, மக்களின் பணத்தை திருடி மேற்கொள்ளும் ஊழல், மோசடிகள் எப்போதும் இரகசியமாகவே இருக்காது என்றும், அது என்றைக்காவது ஒரு நாள் மக்களுக்குத் தெரியவரும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்ததன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச…