மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் பெப்ரவரி 28 வரை செல்லுபடியாகும்

பாடசாலை மாணவர்களுக்காக சீருடை வவுச்சரை நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில, ஆட்சிக்கு வந்த சட்டவிரோத அரசாங்கம் வவுச்சர் விநியோகத்தை இடைநிறுத்தியது. இதன்காரணமாக பாடசாலை மாணவர்களின் அடுத்த ஆண்டுக்கான சீருடை வவுச்சர் இன்னும் கிடைக்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை கல்வியமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற கல்வியமைச்சர்  அகிலவிராஜ் காரியவசம், இது தொடர்பாக அதிகாரிகளை அழைத்து விசாரித்ததையடுத்து பாடசாலை விடுமுறை நிறைவடைவதற்கு முன்னர் சீருடை வவுச்சர்களை துரிதமாக பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்குமாறு  அதிகாரிகளுக்கு…

தேர்தல் ஒன்றில்தான் அரசாங்கத்தை கவிழ்க்கும் சந்தர்ப்பங்கள் அமையும்

நாடுதழுவிய தேர்தல் ஒன்றில்தான் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அல்லது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். ஆயினும்  இவ்வாறான தேர்தலிலும் வெவ்வேறு வகையான சதிகள் இடம்பெறலாம். வெவ்வேறான அதிகாரப்போட்டிகள்  இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும்  இருக்கின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். உயர்கல்வி அமைச்சில் கடந்த வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம்…

வெள்ளம்,சுனாமி அனர்த்த பாதிப்புகள் நீங்க பிரார்த்திப்போம்

வட மாகாணத்தின் பல மாவட்டங்கள் பாரிய வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளன.வடக்கு மாகாணத்தில் வெள்ளம் காரணமாக 13,646 குடும்பங்களை சேர்ந்த 44,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2661 குடும்பங்களை சேர்ந்த 8539 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 52 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்வதனால் அதனை அண்டியுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான கால்நடைகள்…

பஸ் கட்டணம் குறைப்பு

பஸ் கட்டணமானது நான்கு சதவீதத்தால் குறைவடையுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள்  விலைகள், பல சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட நிலையில், பஸ் கட்டணங்களைக்  குறைப்பது தொடர்பில், இன்று  திங்கட்கிழமை பேச்சுவார்த்தை, நிதியமைச்சில் இடம்பெற்றது. ஒரு லீற்றர் டீசலின் விலையை 5 ரூபாவினாலும்,  ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 10 ரூபாவினாலும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல்  குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, இன்று  திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பஸ் கட்டணமானது நான்கு…