இந்தோனேஷியாவுக்கு மீண்டும் சுனாமி எச்சரிக்கை
இந்தோனேஷியாவுக்கு மீண்டும் சுனாமி ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் கரையோரத்தை அண்டியுள்ள மக்களுக்கு உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
கடும் மழை மற்றும் பாரிய அலைகள் மேலெழுவதால், மீண்டும் சுனாமி தாக்கலாமென அஞ்சப்படுகிறது. இந்நிலையில், கரையோரப் பிரதேசங்களிலிருந்து குறைந்தபட்சம் 500 மீற்றர் தொலைவிற்கு செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.…