பத்திரிகையாளர் மீதான அச்சுறுத்தல் நீங்க நீங்க வேண்டும்
உலகளாவிய ரீதியில் பத்திரிகையாளர்களுக்கு இந்த ஆண்டில் முன்னெப்போதுமில்லாதவாறு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக இரு பிரதான சர்வதேச ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
''உலகின் சில பகுதிகளில் பத்திரிகையாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்; கொல்லப்படுகிறார்கள்; சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதுமில்லாத வகையில் மோசமான பகையை சந்தித்து வருகிறார்கள்'' என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இவ்வாண்டில் ஊடகவியலாளர்கள் மீதான கொலைகளும் பணயக் கைதிகளாக பிடிக்கப்படுவதும், ஆளையே…