கஷோக்ஜி கொலையாளிகளை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்த கோரிக்கையை சவூதி நிராகரித்தது

சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையுடன் தொடர்புடையவர்களை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்த கோரிக்கையை சவூதி அரேபியா நிராகரித்துள்ளது. தமது நாட்டு பிரஜைகளை எந்த காரணம் கொண்டும் வேறு நாட்டிடம் ஒப்படைக்கமாட்டோம் என சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அடெல் அல் ஜுபைர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பாக சவூதியின் முன்னாள் புலனாய்வு துறை பிரதானி அஹ்மட் அல் அஸிரி மற்றும் அரச குடும்பத்தின் முன்னாள் ஆலோசகரான சவுட் அல் குவட்டானி உள்ளடங்களாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை…

ஹக்கீமின் கருத்தை நான் வரவேற்கிறேன்

சிறுபான்மை கட்சிகள் கூட்டாகப் பேசி செயற்பட வேண்டுமென்ற  கருத்தை நண்பர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ மேலும் குறிப்பிடுகையில், உண்மையில் தமிழ் கட்சிகளின், தமிழ் பேசும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டம் கட்டமாக ஒன்றாக அமரும் ஒரு அமைப்பு (Caucus of MPs) உருவாக்கப்பட வேண்டுமென இரண்டு வருடங்களுக்கு முன்னமேயே நான் சொன்னதை இந்நாட்டு தமிழ் பேசும் மக்கள் அறிவார்கள். அது அப்போது பல காரணங்களால்…

டைம்ஸ் பத்திரிகையின் 2018 சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் கஷோக்ஜியின் பெயர்

டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் கொல்லப்பட்ட சவூதி பத்திரிகையாளர் ஜமால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜமால் கஷோக்ஜி இடம்பெற்றிருப்பது குறித்து டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடும் போது, ''சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர். இவர் சவூதி இளவரசர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது” என்று கூறியுள்ளது. சவூதி அரசையும் அதன் இளவரசர் முகமம்து பின் சல்மானையும் கடுமையாக  விமர்சித்தவர் பத்திரிகையாளர் ஜமால். இவர் கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி துருக்கி…

வெவ்வேறு விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற மோட்டார் வாகனங்களுடன் தொடர்புடைய விபத்துக்களில் மாத்திரம்  சிக்கி ஐந்து  பேர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலை  6 மணிமுதல் நேற்றுக் காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள்ளேயே இந்த ஐந்து  பேரும் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள்  கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மற்றும் மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவரும் , மோட்டார் சைக்கிள் பாதசாரிகளின் மீது மோதுண்டு…