பாகிஸ்தானின் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் பிரதான அரசியல் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சையத் அலி ரஸா அபிடி என்ற 46 வயதான குறித்த அரசியல் கட்சி உறுப்பினர் அவரது வீட்டின் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னர், மதச்சார்பற்ற முஸ்லிம் குவாமி இயக்கம் – பாகிஸ்தான் என்ற அரசியல் கட்சியில் தலைமையேற்று செயற்பட்டு வந்தார். பின்னர் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அதிலிருந்து விலகினார்.…