விமர்சனங்களை கிளப்பியுள்ள ஞானசார தேரருடான ‘சிறை’ சந்திப்பு
ஏ.ஆர்.ஏ. பரீல்
அல்லாஹ்வையும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் புனித குர்ஆனையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்துகள் வெளியிட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் சிறைக்கூண்டில் விடுதலைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு ஜனாதிபதியிடமிருந்து பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவணா பலய மற்றும் சிங்களே அபி அமைப்புகள் களத்தில் இறங்கி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. 'அவர் நீதிமன்றினை அவமதிக்கவில்லை. கொடிய…