இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் வாழ்த்து!

ஈத் அல்-பித்ர் திருநாள் என்பது மன்னிப்பு, அன்பு மற்றும் இரக்கத்திற்கான நாளாகும். இக்குணாதிசயங்கள்தான் இஸ்லாத்தின் அடிப்படை. ஈத் என்பது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் நாள்; அயலவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சமாதானம் பேணவேண்டிய நாள்.

சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹீம்

‘‘1971 ஆம் ஆண்டு ஒரு நாள். அன்­றுதான் பேரா­தனைப் பல்­கலைக் கழ­கத்தில் மௌலவி இப்­ராஹிம் அவர்­க­ளு­டைய பட்­டப்­ப­டிப்பின் பெறு­பே­றுகள் வெளி­யான நாள். அவ­ருக்கு அது தெரிய முன்பே பல்­கலைக்கழக கீழைத்­தேய மொழிகள் பீடா­தி­பதி பேரா­சி­ரியர். டப்­ளியூ. எஸ். கரு­ணா­ரத்ன. தனது சொந்தக் காரில் உயன்­வத்­தையை நோக்கி புறப்­ப­டு­கிறார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனைக்கான எதிர்வினை: இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னால் உள்ள இரண்டு தெரிவுகள்!

கூர­கல தொல்­லியல் அமை­விடம் தொடர்­பாக 2016 இல் கொழும்பில் நடத்­தப்­பட்ட ஊடக மாநா­டொன்றில் இஸ்லாம் மதத்தை இழி­வு­ப­டுத்தும் விதத்தில் கருத்­துக்­களை தெரி­வித்­த­மைக்­காக அண்­மையில் கொழும்பு மேல் நீதி­மன்றம் பொது­பல சேனா இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.

கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்­ப­டும் விடயத்தில் புத்திஜீவிகளும் உலமாக்களும் கரிசனை செலுத்த வேண்டும்

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் அதி­கா­ரிகள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­னது எதிர்­கா­லத்தில் ஏனைய அரச பத­வி­க­ளுக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம். எனவே, இது விட­ய­மாக முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களும் உல­மாக்­களும் கூடுதல் கரி­சனை செலுத்த வேண்டும் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் உப செய­லா­ள­ரு­மான இம்ரான் மகரூப் தெரி­வித்தார்.