அமைதிக்காக உதவிய தேரர்களுக்கு அமைச்சர் கபீர் நன்றி தெரிவிப்பு
மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதேசத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய விகாரைகளின் தலைமை அதிபதிகளுக்கு பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உட்பட்ட குழுவினர் நேரில் சென்று தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மாவனெல்ல ஹிங்குல் போதி மனு விகாரை, ஹிங்குல ரஜ மகாவிகாரை, அஸ் வாரம ஸ்ரீ மகாபோதி விகாரை, சியம்பலாபிட்டிய ஸ்ரீ சுமங்ல பிரிவெனா, தெஹிமடுவ பழைய…