இஸ்ரேலுக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தை ஜெரூசலத்திற்கு நகர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல்

ஆசிய நாட்டு அயல் நாடுகளுடன் பல தசாப்தகால கொள்கையில் விரிசலை ஏற்படுத்தக்கூடியதும், ஆசிய அயல் நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடியதுமான ஆபத்துடைய டெல் அவிவில் அமைந்துள்ள அவுஸ்திரேலியத் தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றுவதா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கலந்துரையாடலில் ஈடுபட்டதாக குறித்த விடயத்துடன் தொடர்புடைய இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இங்கு அமைச்சரவை கூடியபோது இஸ்ரேலுக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தை ஜெரூசலத்திற்கு நகர்த்துவது தொடர்பான விடயம் கலந்துரையாடப்பட்ட…

பிரேரணையை ஏற்கமாட்டோம்

நாட்டில் அரசாங்கமாகக் கருதப்படும் அமைச்சரவைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போது, ஆளுங்கட்சி இன்றி சபாநாயகர் கருஜய சூரிய பாராளுமன்றத்தை கூட்டியுள்ளமை சட்டவிரோதமாகும். அதன் காரணமாகவே நாம்  பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்தோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க  தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், நாளை (இன்று) அல்லது, நாளை மறுதினம் (நாளை) உயர் நீதிமன்றத்தினால்…

மஹிந்தவின் மேன் முறையீடு நாளைய தினம் பரிசீலனைக்கு

பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்கத் தனக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம்  விதித்துள்ள இடைக்கால தடையை நடை முறைப்படுத்துவதை தடுக்குமுகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.  தாக்கல் செய்த விஷேட மேன்முறையீடை நாளை 14 ஆம் திகதி வெள்ளியன்று பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது. அத்துடன் அமைச்சர்களாகப் பதவிவகித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சமல் ராஜபக் ஷ , தினேஷ் குணவர்தன  மற்றும் விஜேதாஸ ராஜபக் ஷ ஆகியோரும் தமக்கு அமைச்சுப் பதவிகளில் தொடர…

ரணிலுக்கு ஆதரவு 117

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராவதற்கு பாராளுமன்றம் 117 வாக்குகளால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியுடன்  இணைந்து பிரதான எதிர்க்கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிததுடன்  மக்கள் விடுதலை முன்னணி  சபையில் இருந்தபோதும்  வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி என்பன நேற்றைய பாராளுமன்ற அமர்விலும் கலந்துகொள்ளாது புறக்கணித்தனர். பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஒரு…